பாஜக-வை பற்றி விமர்சிக்க வேண்டாம்: அதிமுக தலைமை அறிவுறுத்தல்..!

புதன், 20 செப்டம்பர் 2023 (12:39 IST)
பாஜகவை பற்றி விமர்சிக்க வேண்டாம் என்றும் கூட்டணி குறித்து எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பாஜக உடனான கூட்டணி முறிந்தது என்றும் அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து தூக்கினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்றும் அதிமுகவின் சில தலைவர் தெரிவித்தனர்.  
 
இந்த நிலையில் அதிமுக தலைமை குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தார். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி  பாஜக குறித்தும் அண்ணாமலை குறித்தும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும்  அதிமுக பாஜக கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் அதிமுகவினர்களுக்கு  எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்திவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
 பாஜகவுடன் ஆன கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்த நிலையில் தற்போது திடீரென பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என்று கூறியிருப்பது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்ற புள்ளி
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்