இவர், மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை ரூ. 1.10 கோடி செலவில் அமைத்து தந்தமைக்காகவும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை ரூ. 71.45 இலட்சம் செலவில் அமைத்துத் தந்துள்ளார்.
இதற்காக அவரை அழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருவதற்காகவும் தனது வாழ்த்துகளை தெரிவித்து, சால்வை அணிவித்து, அவருக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையை வழங்கி பாராட்டியுள்ளார்.
இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில்,
பாசத்துக்குப் பெயர் போன மதுரையில் பாசமிகு பெரியவர் தத்தநேரி இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளில் படித்திட வேண்டும் என்ற முனைப்போடு அவர் ஆற்றும் கல்விப் பணிகள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மதுரை மக்களால் பேசப்படும் என்பது உறுதி.