பங்குச்சந்தையில் 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் புதுச்சேரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.இவருக்கு பங்குச்சந்தை தொழிலில் ஈடுபடும் ஆவல் ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து பங்குச்சந்தை தொழிலை மேற்கொண்டவர் 10 லட்ச ரூபாய்க்கு மேலாக நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக அவர் தற்கொலை செய்து கொண்டார் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.