வெற்றிக்கு மேல் வெற்றி.. விருதுநகரை முதன்முறையாக கைப்பற்றும் திமுக!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (11:26 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் விருதுநகர் நகராட்சியில் திமுக பெரும்பாலான வார்டுகளை கைப்பற்றியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உ:ள்ள நிலையில் 20ல் திமுகவும், 8ல் காங்கிரஸும், 3 வார்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் உள்ளாட்சி தேர்தலில் விருதுநகரை திமுக முதன்முறையாக கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்