அதனால் இன்று சட்டப்பேரவைத் தொடங்கியதும் கருணாநிதியின் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வழிமொழிந்தார். தொடர்ந்து பேசிய அவர் ‘கருணாநிதியின் அழகுத் தமிழுக்கு மயங்காதவர் எவரும் இல்லை. அரசியல் எல்லையைக் கடந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே கருணாநிதி மீது அன்பு வைத்திருந்தனர்’ எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து கருணாநிதி குறித்து பேசிய திமுக பொருளாலர் துரை முருகன் , கருணாநிதிக்கும் அவருக்கும் இருந்த நட்பின் நெருக்கம் மற்றும் தன் உடல்நிலை மீது கருணாநிதிக் கொண்டிருந்த அக்கறைப் பற்ரி பேசினார். பேசிக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சிவசப்பட்ட துறைமுருகண் கண்னீர் விட்டு கலங்கினார். அதைப் பார்த்த ஸ்டாலின் அவரின் கையைப் பிடித்து சமாதானப்படுத்தி அமரவைத்தார்.