தனது நண்பர் அனில் அம்பானிக்கு உதவி செய்வதற்காகவே ரபேல் கொள்முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மோடி நுழைத்து விட்டார். மேலும், காவிரி பிரச்சனையை மையமாக வைத்து அவையில் அமளியில் ஈடுபட்டு அதிமுகவினர் ரபேல் விவகாரத்தில் இருந்து மோடியை காப்பாற்றி வருகின்றனர் என நேரடியாக விமர்சித்தார்.
அதோடு, ரபேல் கொள்முதல் விவகாரம் தொடர்பான பல முக்கிய கோப்புகள் இன்னும் தனது வீட்டில் இருப்பதாக முன்னாள் ராணுவ மந்திரியும், தற்போதைய கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அதை அவையில் போட்டுக்காட்ட அனுமதியும் கோரினார் ஆனால் அதர்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.