கரூர் தொகுதியை ஜோதிமணிக்கு வழங்க கூடாது.. திமுக நிர்வாகிகள் கோரிக்கை

Mahendran
திங்கள், 5 பிப்ரவரி 2024 (13:59 IST)
கரூர் தொகுதி எம்பி ஆக இருக்கும் ஜோதிமணிக்கு மீண்டும் அதே தொகுதியை கொடுக்கக் கூடாது என திமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை தொகுதியை சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகிய இருவருக்கும் கொடுக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது கரூர் தொகுதியை காங்கிரஸ் எம்பி ஜோதி மணிக்கு வழங்க கூடாது என  திமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் கரூர் தொகுதி திமுக நிர்வாகிகள் சென்று கரூர் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கூடாது என்றும் அப்படியே ஒதுக்கினாலும் ஜோதிமணி மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே எம்பிக்களாக இருக்கும் பலருக்கு உள்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால்  தற்போது எம்பி ஆக இருக்கும் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்