கு க செல்வம் திமுகவில் இருந்து நிரந்தர நீக்கம் – தலைமை அதிரடி முடிவு!

வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (13:36 IST)
திமுக எம் எல் ஏ கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் கிட்டத்தட்ட பாஜகவில் இணைந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்று பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர் ஸ்டாலின் குறித்து சில குற்றச்சாட்டுகளை கூறியதும் பாஜக தலைவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கு.க.செல்வம் எம்.எல்.ஏ அதிகாரபூர்வமாக பாஜகவில் சேர்ந்ததாக செய்தி வெளியாகவில்லை என்றாலும் பாஜகவின் ஒரு அங்கமாகவே அவர் மாறிவிட்டதாக கருதப்படுகிறது. இதனை அடுத்தே திமுகவில் இருந்து அவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக திமுக ‘திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க. செல்வம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்