உரையை மாற்றி வாசித்தது ஏன்? கவர்னர் அலுவலகம் விளக்கம்!

செவ்வாய், 10 ஜனவரி 2023 (08:12 IST)
கவர்னர் உரையில் தயாரிக்கப்பட்டு அந்த உரை கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்ப பட்ட போதே அதிலுள்ள சில சர்ச்சைக்குரிய விஷயங்களை மாற்றும்படி கவர்னர் அலுவலகம் அறிவுறுத்தியது என்றும் ஆனால் அரசு தரப்பில் உரை அச்சுக்கு சென்றுவிட்டதால் நீங்கள் பேசும்போது அதை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் அவ்வாறு மாற்று பேசிய போது திடீரென எதிர்ப்பு தெரிவித்து வேண்டும் என்றே பிரச்சனை செய்ததாகவும் கவர்னர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாடு அமைதியின் சொர்க்கமாக திகழ்கிறது என்றும் வன்முறையில் இருந்து விடுபட்டு உள்ளது என்றும் அந்த உரையில் இருந்ததை கவர்னர் வாசிக்கவில்லை இது எதார்த்தம் அல்ல என்பதால் கவர்னர் அதை வாசிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது
 
அதேபோல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டது மாநில அரசின் முயற்சியால் மட்டுமே என்ற வரிகளும் வாசிக்கவில்லை ஒரு சர்வதேச பிரச்சினையில் மத்திய அரசு தலையீடு இல்லாமல் மாநில அரசு மட்டும் எப்படி முயற்சி செய்ய முடியும் என்று தான் அந்த வரிகள் தவிர்க்கப்பட்டது
 
அதேபோல் கவர்னர் பேசிக்கொண்டிருக்கும்போது எம்எல்ஏக்கள் கோஷமிட்ட போது சபாநாயகர் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என்றும் சபையின் வரம்புமீறி முதலமைச்சருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தது சபை விதிகளின்படி இல்லை என்றும் அவை மரபை மீறிய செயல் என்றும் கவர்னர் மாளிகை வட்டாரத்திலிருந்து கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்