பிறந்த நாளுக்கு வினோத பரிசு கொடுத்த கருணாநிதி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (17:39 IST)
சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளர் தோல்விக்காக உள்ளடி வேலை பார்த்த கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைமை கல்தா கொடுத்துள்ளது.
 

 
சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்டதாக திமுக ஒன்றியச் செயலாளர்களை அந்தக் கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் இடைநீக்கம் செய்துள்ளார்.
 
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டார் கவிதா. இவரை எதிர்த்து அதிமுக சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். இதில், சுமார் 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வீரமணி வெற்றிக் கனியை பறித்தார். கவிதா தோல்வி அடைந்தார்.
 
இந்தத் தோல்விக்கு அமைச்சர் வீரமணியின் சகோதரரும், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலருமான கே.சி.அழகிரி மற்றும் நாட்டடறம்பள்ளி ஒன்றியச் செயலாளர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர்தான் காரணம் என கவிதா திமுக தலைமைக்கு புகார் தெரிவித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த திமுக தலைமை இந்த விவகாரம் குறித்து களத்தில் இறங்கி உடனே ரகசிய விசாரணை நடத்தியது. இதில் புகாரில் தெரிவிக்கப்பட்ட இருவரும் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து, அவர்கள் இருரையும் கட்சியில் இருந்து அதிராடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அக்கட்சியின்  தலைமை அறிவித்துள்ளார்.
 
மேலும், கட்சி வேட்பாளர்கள் தோல்விக்காக உள்ளடி வேலை பார்த்த பாசக்கார நிர்வாகிகள் தலைமை தேடி வருகின்றதாம். திமுக தலைவர் கருணாநிதி பிறந்த தினம் முடிந்த பின்பு கல்தா லிஸ்ட் நீளும் என்றகின்றனர் விவரம் அறிந்த தலைமைக் கழக நிர்வாகிகள்.  
அடுத்த கட்டுரையில்