தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுகவில் கடந்த சில தினங்களாக பல்வேறு சர்ச்சையான மர்ம தகவல்கள் வந்தவாறு உள்ளன. இவை அனைத்தும் ஜெயலலிதா மரணம், சசிகலா, தினகரன் குடும்பத்தை பற்றியே வருகின்றன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறிய கருத்து ஒன்று தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தீபக், ஆளுநரை பார்த்து ஜெயலலிதா கட்டை விரலை காட்டி சைகை செய்ததாக கூறியது பொய் என கூறினார். மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் மூன்றே நாட்கள் தான் சுயநினைவோடு இருந்ததாக கூறினார்.
அதுமட்டுமல்லாமல், கூவத்தூரில் சசிகலா தலைமையில் முதல்வரை தேர்ந்தெடுக்க நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலில் செங்கோட்டையன் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டாராம். ஆனால் செங்கோட்டையன் வேண்டாம், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகட்டும் என கூறியது தினகரன் தானாம். அப்போது தினகரன் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டையை பிடித்து இழுத்து வந்து அவரை பரிந்துரைத்ததாக தீபக் தனது பேட்டியில் கூறியுள்ளார்.