தேவாலயத்திற்குள் திமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (19:03 IST)
சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையில் திமுக கவுன்சிலர் தனசேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
தாம்பரம் அருகே படப்பையில் உள்ள ஒரு தேவாலயத்திற்குள் இன்று காலை திமுக கவுன்சிலர் தனசேகரன் சென்றுள்ளார். அப்போது தேவாலயத்திற்குள் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் தனசேகரனை வெட்டி கொலை செய்தது.
 
இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால், தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி இருந்தது. ஆனாலும், கொலையாளிகள் யார் என்ற விவரமோ, எதற்காக கொலை செய்தார்கள் என்ற விவரமோ இன்னும் தெரியவில்லை.
 
பரபரப்பான தேவாலத்திற்குள் நடந்துள்ள இக்கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்