முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது அதிரடி அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருக்காக தமிழக அரசு வழங்கிய வாகனத்தை திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் திரும்ப ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில், அதிமுக 134 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுக 89 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சியாக அமர்ந்தது. மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது மாநில அமைச்சர் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவியாகும்.
எனவே, அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட வாகனம், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சலுகளைகலும் வழங்கப்படும்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு அரசு சார்பில் இன்னோவா கார் வழங்கப்பட்டது. ஆனால், அந்த காரை மு.க.ஸ்டாலின் திரும்ப ஒப்படைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர், தனது சொந்த காரை பயன் படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளாராம்.
சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை ஒதுக்காமல் அரசு புறக்கணிப்பு செய்த காரணத்தினால் தான் மு.க.ஸ்டாலின் இந்த முடிவு எடுத்துள்ளாராம்.
கிளம்பிட்டாருய்யா....... அண்ணன் கிளம்பிட்டாருய்யா.... என திமுகவில் குரல் ஒழித்த வண்ணம் உள்ளது.