உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அப்பல்லோ வந்தார்.
தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக் அப்பல்லோ மருத்துவமனை தான். 3 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வரின் உடல் நிலை குறித்து அறிந்துகொள்ள தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பிறமாநில முதல்வர், ஆளுநர்கள், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், எதிர்கட்சி தலைவர், பிரபலங்கள் என அனைவரும் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.
முதல்வரின் உடல் நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சுமார் 45 நிமிடம் சசிகலாவை சந்தித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. ராஜாத்தி அம்மாள், சசிகலா சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.