திமுக தலைவர் கருணாநிதியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி உள்பட ஒருசில அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கோபாலபுரம் சென்றார். அவர் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் சரத்குமார், கே.பாலகிருஷ்ணன், ஜி.கே.வாசன், ஞானதேசிகன் உள்ளிட்டோர் சந்திக்க வருகை தந்தனர். இன்று கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி சென்னை வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.