கருணாநிதி - மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி

Webdunia
புதன், 25 மே 2016 (11:48 IST)
தமிழக சட்டசபையில், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர்.


 

 
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக அமொக வெற்றி பெற்று, கடந்த 23 ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், ஜெயலலிதா  முதல்வராக பதவியேற்றார்.  அவருடன் அவரது கட்சியைச் சேர்ந்த 28 அமைச்சர்களும் குழுகுழவாக பதவியேற்றுக் கொண்டனர். மேலும், சட்டசபை தற்காலிக சபாநாயகராக செம்மலை நியமிக்கப்பட்டார்.
 
அதுபோலவே, திமுக சார்பில் 89 பேர் வெற்றி பெற்றனர். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் 8 பேரும், இந்திய யூனியன் முஸ்லீம் லிக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றனர்.
 
இந்த நிலையில், இன்று காலை தமிழக சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக பொருலாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
 
இந்த முறை சட்டசபைக்கு திமுக தலைவர் கருணாநிதி வெற்றிகரமாக 13ஆவது முறையாகவும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவும் செல்வதால் திமுக தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
 
அடுத்த கட்டுரையில்