ஆர்கே நகரில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: நக்கீரன் சர்வே!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2017 (17:30 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு அதிக ஆதரவு இருப்பதாக நக்கீரன் வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


 
 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அவரது தொகுதியில் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பிளவு பட்டு இருப்பதால் இது திமுகவுக்கு சாதகமாக அமையும் என கூறப்பட்டது.
 
இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட 5000 வாக்காளர்களிடம் நக்கீரன் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில், இளைஞர்களில் 38 சதவீதம் பேர் திமுக வேட்பாளர்கள் மருதுகணேஷுக்கு ஆதரவு தெரிவித்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் 30 சதவீதம் பேர் ஆதரவுடன் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனும், 19 சதவீதம் ஆதரவுடன் தினகரன் மூன்றாவது இடத்தில் உள்ளார்,
 
பெண்களில், 37 சதவீதம் பேர் திமுகவுக்கும், 35 சதவீதம் பேர் மதுசூதனனுக்கும், 19 சதவீதம் பேர் தினகரனுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னதாக ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில் மதுசூதனன் முதலிடத்திலும், திமுக வேட்பாளர் மருத்துகணேஷ் இரண்டாம் இடத்திலும், தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்த இரண்டு கருத்துக்கணிப்பிலும் டிடிவி தினகரனால் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
அடுத்த கட்டுரையில்