ஜாதி குறித்து கேட்ட திமுக; கொந்தளித்த ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (13:17 IST)
திமுக வேட்பாளர் நேர்காணலில் திமுகவினர் ஜாதி குறித்து கேட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



 

 
ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைப்பெற உள்ளது. தமிழக அரசியல் சூழலில் இந்த தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை திமுக சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
 
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ள திமுக வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த வேட்பாளர் நேர்காணலில், உங்கள் சாதி என்ன? எவ்வளவு பணம் செலவு செய்வீர்கள்? என கேள்விகள் கேட்கப்பட்டதாக ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
மேலும், நம்புங்கள்....இவர்கள் தான் சாதியையும், பணபலத்தையும் ஒழிக்க வந்த பரமாத்மாக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்