திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் காங்கிரஸ், மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளுமே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் பேச்சுவார்த்தை குழப்பத்தில் இருப்பதாகவும் கூறியிருப்பதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியை 10 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில் திமுக அதிகபட்சமாக 7 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்று கூறிவிட்டதாம். மேலும் டெல்லி மேலிடத்தில் நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்று திமுக தலைவர் சொன்னதும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம்.
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகள் என உறுதியாக உள்ளது. அதில் 2 தனித்தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத் தொகுதி என்பதில் உறுதியாக இருக்கிறதாம். ஆனால் திமுக இரண்டு தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்றும் வேண்டுமானால் அதில் ஒரு தொகுதி பொதுத்தொகுதி தருகிறோம் என்றும் கூறி வருகிறதாம். இதை ஏற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள் என கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்தாலும் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகள் கிடைக்காது என்று திமுக கூறியிருப்பதால் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது மொத்தத்தில் திமுக கூட்டணியை பேச்சுவார்த்தை குழப்பத்தில் நீடித்து வருவதாக கூறப்படுகிறது