இன்று மதுரை மாநாட்டில் பேசப்போகும் தவெக தலைவர் விஜய், இந்த முறையும் அதிமுகவை விமர்சித்து எதுவும் பேச மாட்டார் என தகவல்கள் வெளியாகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரையில் நடக்க உள்ள நிலையில் ஒட்டுமொத்த கவனமும் மதுரை பக்கம் திரும்பியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கு ஏற்ப குடிநீர், உணவு வசதி, மருத்துவ வசதி என அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று விஜய் மாநாட்டில் என்ன பேசப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் எழுந்துள்ளது. இன்று விஜய்யின் உரை மதுரை மற்றும் தென் மாவட்டங்களின் நலன்களை மையப்படுத்தியதாக அமைந்திருக்கும் என கூறப்படுகிறது,
முக்கியமாக அவரது அரசியல் எதிரி என்று அவரே குறிப்பிட்ட கட்சியையும், கொள்கை எதிரி என்று குறிப்பிட்ட கட்சியையும் விமர்சித்து சில விஷயங்களை விஜய் பேச உள்ளார். மேலும் மதுரையில் திருப்பரங்குன்ற மலை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து மத நல்லிணக்க கண்ணோட்டத்தோடு அவர் சில கருத்துகளை முன்வைக்க உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
ஆனால் இந்த உரையிலும் அவர் அதிமுகவை விமர்சித்து எதுவும் பேச மாட்டார் என்று தகவல்கள் வெளியாகிறது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவையும், மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திமுகவையும் விமர்சிப்பதை விட்டுவிட்டு அவர் ஏன் எதிர்கட்சியான அதிமுகவை விமர்சிக்க வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர் தவெக ஆதரவாளர்கள்.
Edit by Prasanth.K