மக்களவை தேர்தல்: இன்று ஒரே நாளில் அதிமுக, திமுக நேர்காணல்.. சுறுசுறுப்பாகும் அரசியல் தலைவர்கள்..!

Siva

ஞாயிறு, 10 மார்ச் 2024 (07:23 IST)
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வேட்பாளர்கள் நேர்காணல் இன்று முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்ற பணி முடிவடைந்த நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் இன்று வேட்பாளர்களை நேர்காணல் செய்ய இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 21 தொகுதிகளுக்கு வேட்பாளர் யார் என ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார் என்றும் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து வேட்பாளர்களிடம் கேட்டு அறிந்து அதன் பின் அவர் வேட்பாளரை தேர்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடியவில்லை என்றாலும் அதிமுகவும் இன்று வேட்பாளர் நேர்காணல் பணியை ஆரம்பிக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்றும் நாளையும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது என்றும் விருப்ப மனு அளித்தவர்கள் கட்டண ரசீதுடன் தலைமை அலுவலகத்திற்கு வந்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது

இன்று 20 தொகுதிகளுக்கும் நாளை 20 தொகுதிகளுக்கும் நேர்காணலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்