விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
பல கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி சமீபத்தில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை அறிவித்தது. அதன்பின், நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.
சென்னை சத்யமூர்த்தி பவனின் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச்செயளாளர் கே.சி. வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர். இன்றிரவுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும், இன்னும் சற்று நேரத்தில் இரு கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியானது.
எனவே மக்களவை தேர்தலில் திமுக மொத்தம் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 9 மற்றும் புதுச்சேரி, விசிக , சிபிஐ, சிபிஎம் தலா 2 தொகுதிகளிலும், ஐயுஎம்எல் ,கொமதேக, மதிமுக தலா 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.