திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் ராஜினாமாவா? அதிர்ச்சி காரணங்கள்

Webdunia
சனி, 20 மே 2017 (05:02 IST)
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். ஆனால் இப்போதைக்கு சட்டசபையை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டதால் அதிருப்தி அடைந்த மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பிரமுகர்கள் அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.



 


இந்த நிலையில் திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்யும் அதிரடி முடிவை மு.க.ஸ்டாலின் விரைவில் எடுக்கவுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றனர். மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்களுக்கு மேல் ராஜினாமா செய்தால் ஆட்சி கலைந்துவிடும் என்பதால் ஸ்டாலின் இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்கலாம் என்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஸ்டாலின் இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் இந்த முடிவு திமுகவுக்கு பாதகமாக அமைந்துவிடும் என்று ஒருசில திமுகவினர் எச்சரித்து வருகின்றனர். ஆட்சி கலைந்துவிட்டால் மறு தேர்தல் வரும்வரை தமிழக அரசு முழுவதும் கவர்னர் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் சட்டமன்ற கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கையெழுத்து போடாவிட்டால் அவருடைய எம்.எல்.ஏ பதவி பறிபோக வாய்ப்பு உள்ளது என்றும் அதுபோன்ற ஒரு நிலைமை வராமல் இருக்க ராஜினாமா முடிவுதான் சரி என்றும் இன்னொரு தரப்பு கூறி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்