இந்திய தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவு இரட்டை இலை சின்னம் குறித்த முடிவை அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் பெரும் பரபரப்பை எட்டிய நிலையில் திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி மேலும் பரபரப்பை அதிகரித்தது
சென்னை மியாட் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இதுவொரு வழக்கமான பரிசோதனை தான் என்றும் கட்சியின் தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவ பரிசோதனை முடிவடைந்ததும் ஓரிருநாளில் விஜயகாந்த் வீட்டுக்கு திரும்புவார். ஆகையால் நிர்வாகிகளும் தொண்டர்களும் நேரில் வர வேண்டாம்