ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்கள்: விஜயகாந்த் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (13:49 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழை எளிய மக்களின் பசியை போக்குவதற்காக தமிழக அரசும், தன்னார்வலர்களும், திரையுலக பிரபலங்களும், தொழிலதிபர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் ஆனால் இந்த நிவாரண உதவி ஊரடங்கு முடிந்தபின்னர் அதாவது மே 3ஆம் தேதிக்கு பின் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மே 3ம் தேதிக்கு பிறகு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு,  சமூக இடைவேளி,  இவையெல்லாம் நீங்கிய பிறகு தேமுதிக சார்பில்  மாவட்ட வாரியாக நகரம், ஒன்றியம், பேரூர் கழகம், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள்,  மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக செய்ய வேண்டும். 
 
உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை, மருத்துவம், வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு பண உதவி போன்றவற்றை யாருக்கு என்ன தேவையிருக்கிறது என்பதை குறிப்பு அறிந்து, மக்களுக்கு நேரடியாக சென்றடைய நாம் தாயராக இருப்போம். கொரோனா ஊரடங்கு விலகிய பிறகு மே3ம் தேதிக்கு பின்னர்  கழக நிர்வாகிகள் ஒவ்வொரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க  தயாராக இருங்கள் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்