சென்னை திரும்பினார் விஜயகாந்த்: விறுவிறுப்பு அடையுமா கூட்டணி பேச்சுவார்த்தை?

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (09:59 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நிலையில் அவர் சிகிச்சை முடிந்து பூரண குணமாகிவிட்டதால் பிப்ரவரி 16ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயகாந்த் வந்தடைந்ததாகவும், அவரை தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் விஜயகாந்த் சென்னை திரும்பிவிட்டதால் விரைவில் கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் அதேபோல் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு விஜயகாந்த் உள்பட அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்