ஒரே போன்காலில் எல்லாம் ஒகே: ஆக்‌ஷனில் பிரேமலதா; கிரெடிட் விஜயகாந்திற்கு...!!

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (17:36 IST)
அந்தமானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு வேண்டிய உதவியை தேமுதிகவினர் செய்துள்ளனர்.  
 
ஊரடங்கு அமலில் உள்ளதால், அந்தமானில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழக மீனவர்கள் ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். இதனை செய்தி மூல தெரிந்துக்கொண்ட விஜயகாந்த் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கோரினார். 
 
உடனே பிரேமலதா விஜயகாந்த், அந்தமான் தேமுதிக செயலாளர் உதயசந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவுமாறு கோரியுள்ளார். 
 
பின்னர் அந்தமான் தேமுதிக செயலாளர் தமிழக மீனவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். இதனால் தமிழக மீனவர்கள், விஜயகாந்திற்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்