சசிக்கலாவை புகழ்ந்து தள்ளும் தேமுதிக! – இடம் மாறுகிறதா கூட்டணி பேச்சுவார்த்தை?

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (09:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிகவினர் சமீப காலமாக சசிக்கலாவுக்கு ஆதரவாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளிலும், கூட்டணி பேச்சு வார்த்தைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேமுதிக – அதிமுக கூட்டணி இன்னும் உறுதியாகாத சூழல் உள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக தேமுதிகவினர் சசிக்கலாவுக்கு ஆதரவாக பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சசிக்கலாவின் அரசியல் வரவை ஒரு பெண்ணாக இருந்து வரவேற்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வந்தார்.

இந்நிலையில் தற்போது சசிக்கலாவின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ள விஜய பிரபாகரன் “ஒரு பெண்மணியாக சசிகலா பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு தைரியமாக செயல்படுகிறார்” என புகழ்ந்துள்ளார். இதனால் எதிர்வரும் தேர்தலில் தேமுதிக – அமமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்