தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை... அதிரடி அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 28 அக்டோபர் 2024 (12:57 IST)
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை அடுத்து, சமீபத்தில் நவம்பர் 1ஆம் தேதியும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய இரண்டு நாட்களுடன் சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை வருவதால், தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் ஏற்கனவே விடுமுறை நாளாக இருக்கும் நிலையில், நவம்பர் 2 கல்லறை நாள், நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதுவும் விடுமுறையாக உள்ளது. இந்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என புதுவை அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை என்று புதுவை அரசு அறிவித்துள்ளது.

எனவே அக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரை 5 நாட்கள் புதுவைக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் புதுவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்ற அறிவிப்பு தமிழகத்திலும் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்