முன்னே பின்னே மோதிக்கொள்ளும் ஏரியாக்கள்: கொரோனா களோபரத்தில் சென்னை!

புதன், 3 ஜூன் 2020 (10:37 IST)
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3,060 பேருக்கு கொரோனா. 
 
நேற்று தமிழகத்தில் 1091 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,091 பேர்களில் சென்னையில் 809 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது.
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3060 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 1,921, தண்டையார்பேட்டையில் 2,007, தேனாம்பேட்டையில் 1,871, அண்ணா நகரில் 1,411, அடையாறில் 949, வளசரவாக்கத்தில் 910 ஆக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்