மதுரை அன்புவால் நடந்து வரும் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும்: சுசீந்திரன்

Webdunia
புதன், 22 நவம்பர் 2017 (05:55 IST)
நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமாரின் உறவினரும், அவருடையை கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் கோலிவுட்டையே அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில் அசோக் குமாரின் இந்த துயரமான முடிவுக்கு இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.





இயக்குநர் சுசீந்திரன் அசோக் குமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: அசோக் குமாரின் மரணத்திற்கு காரணமான மதுரை அன்பு தண்டிக்கப்பட வேண்டும். மதுரை அன்புவால் நடந்து கொண்டு இருக்கும் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். கடந்த மாதம் கந்து வட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அடங்குவதற்குள் கடன் தொல்லையால் மேலும் ஒருவர் தற்கொலை செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளார்

இந்த விஷயம் மதுரை அன்பு சம்பந்தப்பட்டது என்பதால் பெரிய நடிகர்கள், பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் குரல் கொடுக்க தயங்கி வருவதாகவும், கோலிவுட் திரையுலகில் உருவாகி வரும் பல படங்களுக்கு அவர்தான் பைனான்சியர் என்பதே இந்த தயக்கத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்