மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான ரோகிணி, இயக்குநர் கரு. பழனியப்பன், இயக்குநர் ராஜூமுருகன்,இயக்குநர் கோபி நயினார், இயக்குநர் லெனின் பாரதி, மருத்துவர் கு.சிவராமன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
அப்போது ஆளும் அதிமுக ஆட்சியின் அவலங்களையும், பாஜகவையும் கடுமையாக சுட்டிக்காட்டி கிண்டலாக பேசிய கரு பழனியப்பனின் பேச்சுக்கு மக்களிடம் அப்ளாஸ் அள்ளியது. மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி என்று சொன்னாலே மக்கள் சிரிக்கிறார்கள். தமிழக முதல்வர் பதவி இப்படி சிரிப்பாய் சிரிப்பது இதுவே முதல்முறை என்று கூறி நக்கலடிக்க அங்கிருந்தவரகளும் சிரித்துவிட்டனர்.