8 வழிச்சாலை: விடாமல் துரத்தும் ஆளும் கட்சி; விரக்தியில் மக்கள்

திங்கள், 8 ஏப்ரல் 2019 (15:43 IST)
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்து வந்தது. 
 
இதனை எதிர்த்து விவசாயிகளும், மக்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பான வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில், இன்று 8 வழி சாலைக்கு விவசாயிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலம் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசின் இந்த கையகப்படுத்தப்பட்ட நடவடிக்கை செல்லாது எனவும் அதிரடியாக தீர்ப்பு வெளியிடப்பட்டது. 
 
இந்த தீர்ப்பை பலர் வரவேற்றுள்ள நிலையில், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு, 
8 வழிச்சாலை குறித்து வெளியாகியுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து யாருக்கும் பாதிக்காத வகையில் முதல்வர் முடிவு எடுப்பார். 
 
எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் டெட்பாடியாக உள்ளது. எந்த அரசியல் கட்சியும் உயிருள்ள இயக்கமாக இல்லை. மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் தினகரனுக்கு துளியும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஸ்டாலின் திமுக தலைவரானார் எனவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

8 வழிச்சாலை வழக்கில் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து மகிழ்ச்சி அடைந்த பொது மக்கள் ஆளும் கட்சியின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்வோம் என கூறியுள்ளது மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்