திண்டுக்கலில் திடீர் நில அதிர்வு; சுவர்களில் விரிசல்! – மக்கள் அலறியடித்து ஓட்டம்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (10:24 IST)
திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கிராமம் கொ.கீரனூர். காலையில் மக்கள் தங்கள் அன்றாட பணிகளை தொடர்ந்து வந்த நிலையில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் நில அதிர்வால் அப்பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அலறியடித்து வெளியே ஓடிய மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்