காந்தியைப் போல வீரமணியும் சுடப்படலாம் – தினமலர் பதிலால் சர்ச்சை !

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (15:16 IST)
காந்தியைப் போல திராவிடர் கழக தலைவர் வீரமணியும் கோபமிக்க இளைஞர் ஒருவரால் சுட்டுக்கொள்ளப்படலாம் என்ற தினமலர் இதழின் இணைப்பான வாரமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர் நாளிதழின் ஞாயிறு இணைப்பான வாரமலரில் கேள்விபதில் இடம்பெறும் பகுதியில் வாசகர் ஒருவர் ‘தன்னைத் தானே தமிழர் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் கி.வீரமணி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை மட்டும் தொடர்ந்து திட்டி வருகிறார்.மற்ற சாதிக்காரர்கள் பற்றி வாய் திறப்பதில்லையே?’ எனக் கேட்டிருந்தார். அதற்கு அந்துமணியின் பதிலளிக்கும் விதமாக ’ ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றது போல காந்தியை கேட்சே சுட்டுக்கொன்றது போல வீரமணியையும் வீரம்மிக்க இளைஞர் சுட்டுக்கொல்லும் நிலை ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த பதிலால் தமிழக அரசியல் களம் பரபரபபானது. இதற்கு அரசியல் ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலளித்துள்ள வீரமணி a‘நான் வர்ணாசிரமம், சாதி இழிவினை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன். போராடிக் கொண்டுதான் இருப்பேன். என்னை பலி கொடுப்பதன் மூலம் இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லப்படுவதற்கு விரும்புகிறேன்’ எனப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்