தினகரின் 18 எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் சேப்டி...

திங்கள், 22 அக்டோபர் 2018 (18:38 IST)
எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்னும் இரண்டு நாட்களில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறவுள்ள நிலையில் அ.ம.மு.க கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் ஆளுங்கட்சி, அ.ம.மு.க மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தை ஆவலுடன்  எதிர்நோக்கியுள்ளன.
 
டிடிவி தினகரனுக்கு  ஆதரவாக செயல்பட்டதாக 18 எம்.ஏக்களும்.சென்ற வருடம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள் .இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி தினகரன் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
 
இந்த வழக்கு விசாரனை சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் இரண்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை கூறிவிட்ட நிலையில் அடுத்ததாக 33வது நீதிபதியான சத்திய நராயணன் நாளை  இவ்வழக்கு குறித்து தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வழக்கின் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் டிடிவி.தினகரன் தன் ஆதரவு எம்.ஏக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்க இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுள்ளதாக தெரிகிறது. 
 
இதற்காக 18 எம்.எல்.ஏக்கள் தங்குவதற்கு குற்றாளத்தில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்த தீர்ப்பின் வெற்றி யாருக்கு சாதகமாக அமைகிறதோ அது இனி அடுத்து வரப்போகிற தேர்தல்களிலும் பிரதிபலிக்கும் என்பதால் இருதரப்பினரும் (அதிமுக- அமமுக) பரபரப்புடன் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்