ஜெ.வை ஒருமையில் திட்டி தீர்த்த தினகரன்?: கோபத்தில் அதிமுகவினர்!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (11:04 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுகவின் இரண்டு அணியினரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக காஞ்சி மடத்தில் உள்ள ஜெயேந்திரரை சசிகலா அணியின் தினகரன் சென்று சந்தித்து பேசியதாக பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


 
 
அந்த இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் தினகரன் ஜெயேந்திரரிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒருமையில் திட்டியதாக கூறப்பட்டுள்ளது. காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரை கைது செய்து சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. எனவே ஜெயலலிதாவை திட்டினால் ஜெயேந்திரர் நமக்கு உதவுவார் என்ற கணக்கில் தினகரன் செயல்பட்டுள்ளார்.
 
ஜெயேந்திரரின் காலில் விழுந்த தினகரன், அந்தம்மா பெரிய பாவம் பண்ணிட்டா. உங்களை மாதிரி மகானான சன்னியாசிங்க சாபம் விடுற அளவுக்கு உங்க வழியில நின்னுட்டான்னு ஒருமையில் திட்டியுள்ளார். மேலும் விஜயேந்திரரை சந்தித்த தினகரன், உங்க இரண்டு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பிய பாவத்தின் பலனை அப்பல்லோவில் ஜெ. அனுபவிச்சுட்டா. அவங்களோட இருந்த பாவத்துக்கு என் சின்னம்மா ஜெயில் தண்டனை அனுபவிக்கிறா எனவும் கூறியதாக கூறப்பட்டுள்ளது.
 
பின்னர் தேர்தல் ஆணைய சிக்கலில் தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் தினகரன். ஆனால் அவருக்கு எந்தவித உறுதியும் வழங்காமல் நல்லபடியா நடக்கும் என அனுப்பி வைத்தனர். பின்னர் இதனை பாஜக மேலிடத்துக்கு சொல்லியுள்ளனர் மடத்தில் உள்ளவர்கள். அவர்கள் மூலமாக தினகரன் பேசியது தற்போது கசிந்துள்ளது. இதனால் அதிமுகவினர் தினகரன் மீது கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்