இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: "திருவண்ணாமலை ஏந்தலில் ஆந்திர மாநிலப் பெண்ணைக் காவலர்களே பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம், காவல்துறையினரே இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் அளவுக்குத் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைக் காட்டுகிறது."
 
									
				
	 
	மேலும், "குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்குடனே செயல்படும் திமுக அரசால், பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் உள்ளது. இதற்கெல்லாம் காவல்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்," என்று அண்ணாமலை கூறியுள்ளார்.