ஹெல்மெட் போடாதவர்களுக்கு வினோத தண்டனை – சுற்றுலா அழைத்துச் சென்ற தர்மபுரி போலிஸ் !

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (08:44 IST)
தர்மபுரி மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த 70 பேரைப் பிடித்த போலிஸ் விழுப்புணர்வாக அவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றனர்.

இந்தியாவில் நடக்கும் வாகன விபத்துகளில் அதிகமாக நடப்பது இரு சக்கர வாகனங்களால்தான் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்பு அல்லது படுகாயம் அடைவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஹெல்மெட் அணியாமல் இருப்பதுதான். அதனால் இருசக்கரவாகனங்களில் பயணம் செய்யும்போது ஓட்டுபவர் மட்டும் இல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதை நடைமுறைப்படுத்த காவல்துறையும் கடுமையாகப் போராடி வருகிறது.

அதன் ஒருக் கட்டமாக தர்மபுரி மாவட்டக் காவல்துறையினர் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேற்று ஒரு விஷேச சுற்றுலா நிகழ்ச்சியை நடத்தினர். அதன் படி ஹெல்மெட் அணியாமல் வந்த 70 பேரைப் பிடித்து அவர்களிடம் எந்த அபராதமும் விதிக்காமல் அவர்களைப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்துக்கு போலிஸ் வேனில் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சென்று ஹெல்மெட் அணியாமல் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்களுக்கு விளக்கியுள்ளனர். இதையடுத்து  அந்த 70 பேரும் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து இனிக் கட்டாயம் ஹெல்மெட் அணிவதாக உறுதியளித்ததை அடுத்து அவர்களை அனுப்பினர். இந்த நூதன விழுப்புணர்வு பேரணி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்