ஹெல்மெட்டை அணிந்து செல்லுங்கள் ..மீறினால் 10 மடங்கு அபராதம் !

புதன், 7 ஆகஸ்ட் 2019 (15:18 IST)
நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகனச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இனிமேல் தலைக்கவசம் அணியாதவருக்கு தற்போது விதிக்கப்படும் அபராத தொகையான ரு. 100 லிருந்து, ரூ. 1000 வரை உயர்ந்தப்பட்டு விரைவில் இது நடைமுறைப்படுத்த இருப்பதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 
இதுகுறித்து போகுவரத்து போலீஸார் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
 
சாலையில் விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாகவே உள்ளனர்.  இதில் 90% இளைஞர்கள் தலைக்கவசம் அணியாததால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.
 
மேலும் தலைக்கவசம் அணிந்து செல்லும் போது, chain strap சரிவர அணியாமல் செல்கின்றனர். அதேபோன்று பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, தலைக்கவசம் அணிய வேண்டாம் என்ரு கருதுகிறார்கள். அது தவறானது விபத்து எப்போது நடக்கும் என்று தெரியாது அதனால் தலைக்கவசம் அணிய வேண்டும். பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தினர். 
மோட்டார் வாகனச் சட்டத்திருந்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளதால், தலைக்கசம் அணியாதவருக்கு விதிக்கப்படும் அபராதம்  ரூ. 100 லிருந்து ரூ. 1000ஆக விரையில் உயர்த்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் செல்போனை தவறாமல் எடுத்துச்செல்வது போல் மறக்காமல் தலைக்கவசத்தையும் எடுத்துச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்