நடிகர் தனுஷ் யாருடைய மகன்: மௌனம் கலைத்தார் கஸ்தூரி ராஜா!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (10:34 IST)
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மேலூரை சேர்ந்த தம்பதிகள் உரிமை கொண்டாடுகின்றனர். கதிரேசன், மீனாள் தம்பதியினருக்கு 1985-ஆம் ஆண்டு பிறந்துள்ளார் தனுஷ். இவருடைய உண்மையான பெயர் கலையரசன் என அவர்கள் கூறுகின்றனர்.


 
 
தங்கள் மகன் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது கடந்த 2002-ஆம் ஆண்டு படிக்க பிடிக்கவில்லை என பிரிந்து சென்றுவிட்டான். தனுஷ் என பெயரை மாற்றி நடிகராக மாறிவிட்டதாகவும், இதுவரை தங்களை வந்து பார்க்கவில்லை எனவும். சென்னைக்கு சென்ற அவரை பார்க்க முயன்றால் கஸ்தூரி ராஜா குடும்பத்தினர் தங்களை தடுத்து வருகின்றனர் எனவும் கூறுகின்றனர் கதிரேசன், மீனாள் தம்பதியினர்.
 
இது தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தையே தற்போது நாடியுள்ளனர். தனுஷ் தங்கள் மகன் தான் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யவும் தயாராக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
 
பிரச்சனை விவகாரமாக மாற முதன் முறையாக இது தொடர்பாக மௌனம் கலைத்துள்ளார் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா. தனுஷின் திடீர் பெற்றோர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் கஸ்தூரி ராஜா.
 
இது குறித்து அவர் கூறியதாவது, தனுஷ் என் மகன் அல்ல என வழக்கு தொடரப்பட்டுள்ள செய்தி அறிந்து வருத்தமாக உள்ளது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. நீதித்துறையின் பொன்னான நேரம் இது போன்ற பொய் வழக்குகளால் வீணடிக்கப்படுகிறதே என்று வருத்தமாக உள்ளது.
 
கடந்த 40 ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னுடைய நண்பர்களுக்கு நன்கு தெரியும். எனது மகன் தனுஷை சிறு வயதில் இருந்தே அனைவருக்கும் தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்