சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி! – பக்தர்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (11:14 IST)
சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி மலைக் கோவிலுக்கு செல்ல வனத்துறை பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சுந்தரமகாலிங்க சுவாமி மலைக்கோவில் புகழ்பெற்ற சிவன் ஸ்தலமாகும். மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் சிவராத்திரி சமயங்களில் இந்த மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தமிழ்நாடு வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

தற்போது மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வரவிருக்கும் நிலையில் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஜனவரி 4 முதல் 7ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்