இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

Siva

செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (10:21 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாகவும் ஒரு சவரன் ரூபாய் 8000 என்ற விலையை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று ஒரே நாளில் சென்னையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாயும் ஒரு சவரனுக்கு 240 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் இன்றைய சென்னை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,970 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 உயர்ந்து  ரூபாய்  63,760 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,694 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,552 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 108.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  108,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்