தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

Mahendran
செவ்வாய், 26 நவம்பர் 2024 (10:06 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, தமிழ்நாட்டை நோக்கி நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பத்து கிலோமீட்டர் வேகத்தில் தமிழ்நாட்டை காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், நாகப்பட்டினத்திற்கு 630 கிலோமீட்டர் தூரத்தில், தென்கிழக்கில் திரிகோணமலைக்கு 340 கிலோமீட்டர் தெற்கு மற்றும் தென்கிழக்கில்  புதுச்சேரிக்கு 750 கிலோமீட்டர் தெற்கு மற்றும் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக, தமிழகம்m மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் அதிக கன மழை பெய்யும் என்றும், குறிப்பாக தென் மாவட்டங்களில் மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்