டெங்கு பாதிப்பு நிலவரம் ஆய்வு; மத்திய அரசின் மருத்துவ குழு

சனி, 14 அக்டோபர் 2017 (16:53 IST)
தமிழகத்தில் டெங்கு பாதிப்பின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட மத்திய அரசின் மருத்துவ குழுவினர் இரண்டாவது நாளாக சேலம் மாவட்டத்தில் ஆய்வைத் தொடர்ந்துள்ளனர்.

 
இந்த குழுவில் அசுதோஷ் பீஷ்வாஸ், ஸ்வாதி துப்லிஸ், கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கரக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நேற்று, சென்னையில் தனது ஆய்வை தொடங்கிய இந்தக் குழு, இன்று இரண்டாவது நாளாக சேலம் மாவட்டம்  ஓமலூரில் தங்கள் ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.
 
உயிர்க்கொல்லி நோயாக டெங்கு காய்ச்சல் பல்கிப் பெருகி வருகிறது. நாள்தோறும் 10 பேராவது டெங்குவிற்கு பலியாவது தொடர்கதையாகி வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முயற்சிகளில் அரசுடன் இணைந்து அரசியல்  கட்சிகள், தொண்டு நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.
 
இந்த குழுவினர் சேலம், தருமபுரியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், சேலம்  மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்