விஜய் வீட்டுக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு திடீரென சென்ற போலீசார். அரை மணி நேரம் என்ன நடந்தது?

Siva

வியாழன், 9 அக்டோபர் 2025 (08:21 IST)
கடந்த சில நாட்களாக பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை அடுத்து அவருடைய வீட்டில் அரை மணி நேரம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.  திடீரென நள்ளிரவு சுமார் 1.50 மணியளவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
நள்ளிரவு சுமார் 1.50 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதனை அடுத்து உடனடியாக விஜய் வீட்டிற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் அரை மணி நேரம் சோதனை நடத்தியதாகவும், சோதனையில் எந்த விதமான ஆபத்தான பொருளும் கைப்பற்றப்படவில்லை என்பதை அடுத்து இதுவும் ஒரு மிரட்டல் எனத் தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் வீடு, திரிஷா வீடு உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், தற்போது விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்