மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேமுதிக அறிவிப்பு

Webdunia
சனி, 6 மே 2023 (16:14 IST)
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பாக வருகிற 28ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக அறிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்தும், அனுமதி பெற்ற அளவைவிட ஆயிரம் மடங்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க கோரியும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பாக வருகிற 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 28ஆம் தேதி ஆலங்குளத்தில் கழக பொருளாளர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்தும், அனுமதி பெற்ற அளவைவிட ஆயிரம் மடங்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க கோரியும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பாக வருகிற 28ஆம் தேதி காலை 11 மணி அளவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கழகப் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மக்கள் நலனுக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்