சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சனி, 6 மே 2023 (15:22 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இது குறித்து கூறிய போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி தடைபடும் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று கூறியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னையில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் சென்னை மற்றும் மும்பை போட்டி தடைபடும் அளவுக்கு பெரிய மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் இன்றைய போட்டி நிச்சயமாக முழுமையாக நடைபெறும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
எனவே இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுவதால் இன்றைய போட்டியின் முடிவில் வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்