வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

Mahendran
புதன், 13 நவம்பர் 2024 (14:50 IST)
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணிபுரிந்த பாலாஜி என்ற மருத்துவரை நோயாளியின் மகன் விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு தண்டனம் தெரிவித்து அரசு மருத்துவர்கள் சங்கத்தில் உள்ள மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் மருத்துவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ள நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் கோரிக்கைகள் இதோ:
 
* அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், உடன் வருவோரை முழுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
 
* குறிப்பிட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை தருமாறு சிபாரிசு செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
 
* அரசு மருத்துவமனைகளில் சிசிடிவியுடன் கூடிய 2 கட்ட பாதுகாப்பு தரப்பட வேண்டும்.
 
* அரசு மருத்துவமனைகளின் வெளி நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து இடங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும்.
 
* பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.
 
* அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வரை புதிய அரசு மருத்துவமனைகள் திறக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்