சென்னைக்கும் பரவும் டெல்லியின் காற்று மாசு: எப்படி தெரியுமா?

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (08:43 IST)
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, வங்காள விரிகுடா கடல் மூலமாக தமிழகத்திர்கு குறிப்பாக சென்னைக்கு பரவி வருவதாக, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை அருகேயுள்ள மணலியில் காற்று மாசு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு சென்னைக்கும் பரவிவருகிறது. டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக வங்காள விரிகுடா பகுதிக்கு வருகிறது
 
பின்னர்  வங்காள விரிகுடாவில் இருந்து கடற்காற்று மூலமாக சென்னை உள்பட பல பகுதிகளுக்கும் பரவி வருகிறது. மணலியில் காற்றின் மாசு கடந்த சில நாட்களாக அதிகமாகி இருப்பதற்கு காரணம் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து காற்று மாசுதான். 
 
இது ஒரு மிகவும் மோசமான சூழல். தமிழகம் குறிப்பாக சென்னையில் ஏற்பட்டுள்ள மாசுவை உடனடியாக தடுக்க மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சென்னை உள்பட தமிழக மக்கள் மிகப்பெரிய சுகாதார கேட்டை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்